நல வாரியத்தில் பதிவு செய்வதினால் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகள்..?

AK INFO IN TAMIL


நல வாரியத்தில் பதிவு செய்வதினால்  கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகள்!

1.#திருமணம்

(குடும்பத்திற்கு இருமுறை மட்டும்) தொழிலாளர் () தனது மகன் () மகள் திருமணத்திற்கு.   *உதவித்தொகை* - ரூ3,000/- (ஆண்),ரூ5,000/- (பெண்),

2.#மகப்பேறு

பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்) *உதவித்தொகை* ரூ 6,000/-

3.#கருச்சிதைவு

பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு இரு முறை மட்டும்) *உதவித்தொகை* ரூ 3,000/-

4.#கல்வி 

(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்)

) 10-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்உதவித்தொகை* ரூ 1,000/-

) 11-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) உதவித்தொகை* ரூ 1,000/-

 ) 12-ம் வகுப்பு படிப்பதற்கு (பெண் குழந்தைகளுக்கு மட்டும்) உதவித்தொகை* ரூ 1,500/-

) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி *உதவித்தொகை* ரூ 1,000/-

) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி *உதவித்தொகை* ரூ 1,500/-

) பட்டப்படிப்பு :  முறையான பட்டப்படிப்பு *உதவித்தொகை* ரூ 1,500/-;  விடுதியில் தங்கிப் படித்தால் *உதவித்தொகை* ரூ 1,750/-

) பட்ட மேற்படிப்பு:  முறையான பட்டமேற்படிப்பு *உதவித்தொகை* ரூ 4,000/- ; விடுதியில் தங்கிப் படித்தால் *உதவித்தொகை* ரூ 5,000/-

) தொழிற்நுட்பப் பட்ட படிப்பு: சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை,மருத்துவம் போன்ற தொழிற்நுட்பப் பட்ட படிப்பு *உதவித்தொகை* ரூ 4,000/-

விடுதியில் தங்கிப் படித்தால் *உதவித்தொகை* ரூ 6,000/-

) தொழிற்நுட்பப் பட்டமேற்படிப்பு *உதவித்தொகை* ரூ 6,000/-; விடுதியில் தங்கிப் படித்தால் *உதவித்தொகை* ரூ 8,000/-

) .டி.. அல்லது பாலிடெக்னிக் படிப்பு *உதவித்தொகை* ரூ 1,000/-; விடுதியில் தங்கிப் படித்தால் *உதவித்தொகை* ரூ 1,200/-

5. கண் கண்ணாடி

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு மட்டும். *உதவித்தொகை* ரூ ,500/- க்கு மிகாமல்

6. ஓய்வூதியம்

60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளியாக இருக்க வேண்டும் அல்லது 60 வயதினை நிறைவு செய்யாதிருந்தாலும் பதிவு செய்திருந்து நோயின் காரணமாக வழக்கமான பணி செய்ய இயலாமல் முடக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.  *உதவித்தொகை* ரூ 1,000/- மாதம் ஒன்றிற்கு 

7.# குடும்ப ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறும் கட்டுமானத் தொழிலாளி இறந்துவிட்டால் அவரது கணவர்/ மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் *உதவித்தொகை* ரூ 400/- மாதம் ஒன்றிற்கு

8.#விபத்து மரணம்

(கட்டுமானத் தொழிலாளி 11.12.2014-க்கு பிறகு பணியின்போது பணியிடத்தில் விபத்து மரணம் நிகழ்ந்தாலும், 01.03.2016-க்கு பிறகு பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளி பணியிடத்தில் இறந்தாலும்) *உதவித்தொகை* ரூ 5,00,000/

01.03.2011-க்கு பிறகு பணியிடம் அல்லாத இடத்தில் விபத்தில் இறந்தாலும் *உதவித்தொகை* ரூ 1,00,000/

9. விபத்து ஊனம்

உடல் உறுப்பு இழப்பு அல்லது உடல் உறுப்பு துண்டிக்கப்படுதல் அல்லது நிரந்தரமாக உடல் உறுப்பு செயல் இழப்பு ஏற்பட்டால் ஊனத்திற்கு தகுந்தாற்போல் இழப்பீட்டுத் தொகை *உதவித்தொகை* ரூ 1,00,000/ வரை 

விபத்து ஊன உதவித் தொகையினை தவிர ஊனத்தின் தன்மைக்கேற்ப செயற்கை உறுப்புகள் / சக்கர நாற்காலி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்,

10. இயற்கை மரணம்

நியமனதாரருக்கு மட்டும் (17.11.2017 க்கு பிறகு) *உதவித்தொகை* ரூ ,20,000/

11.#ஈமச்சடங்கு*

நியமனதாரருக்கு மட்டும் (17.11.2017 க்கு பிறகு) *உதவித்தொகை* ரூ ,5,000/

நல உதவி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

பொதுவான_ஆவணங்கள்: 

அசல் அடையாள அட்டை

வங்கி கணக்கு, ஆதார் அட்டை

#திருமணம்

திருமண அழைப்பிதழ்;  திருமணம் நடைபெற்றதற்கான சான்று; திருமணம் செய்து கொள்பவர்; ஆண் எனில் 21 வயதும், பெண் எனில் 18 வயதும் நிறைவு செய்தார் என நிரூபிக்கும் வயது சான்றிதழ்,

#மகப்பேறு*

அசல் பிறப்பு சான்றிதழ்; குறைப்பிரசவம்/ கருக்கலைப்பு எனில் பதிவு பெற்ற மருத்துவரின் சான்று. (உதவி சிவில் சர்ஜன் தரத்தில்)

#கல்வி*

1. கல்வி பயிலும் ஆண்டிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

2. பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும் படிப்பு சான்றிதழ் பதிவு பெற்ற தொழிலாளியின் மகள் என்றும் கல்வி பயிலும் ஆண்டினையும் குறிப்பிட வேண்டும்.

3. சான்றொப்பமிட்ட தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல் / பள்ளி மாற்று சான்றிதழ்.

4. கல்லுரி படிப்பில் சேர்ந்து பயில்வது குறித்தான கல்வி நிலைய முதல்வரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்.

5. விடுதியில் தங்கி படிப்பவர் முதல்வரிடம் அல்லது விடுதி காப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட சான்று.

#கண்_கண்ணாடி

கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று கண் கண்ணாடி வாங்கியதற்கான அசல் பற்றுச் சீட்டு.

#ஓய்வூதியம்*

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ.

#முடக்க_ஓய்வூதியம்*

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, மருத்துவச் சான்று அரசு சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது, (முடக்க ஓய்வூதியத்திற்கு மட்டும்)

#குடும்ப_ஓய்வூதியம்*

இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஓய்வூதியதாரரின் அசல் இறப்பு சான்றிதழ், வாரிசு உரிமைச் சான்றிதழ்.

#விபத்து_மரணம்*

அசல் இறப்பு சான்றிதழ், முதல் தகவல் அறிக்கை (FIR), பிரேதப் பரிசோதனை அறிக்கை.

#விபத்து_மரணம்*

(உதவித் தொகை, உதவி உபகரணம்) மருத்துவச்சான்று பணித்திறன் இழப்புச் சான்று (உதவி சிவில் சர்ஜனால் வழங்கப்பட்டது) ஹாஸ்பிடல் டிஸ்சார்ஜ் சம்மரி முதல் தகவல் அறிக்கை (FIR).

#இயற்கை_மரணம், #ஈமச்சடங்கு*

அசல் இறப்பு சான்றிதழ்.

நலத்திட்ட உதவிகள் வங்கி கணக்கில் செலுத்துதல் (ECS)

அரசாணை எண்.102, நாள் – 08.11.2011 (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை)-ன்படி இவ்வாரியங்களின் நலத் திட்ட உதவிகளுக்கான பணப்பயன்கள் நேரடியாக பதிவு பெற்ற தொழிலாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மாண்புமிகு முதல்வர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்:-*

இந்த காப்பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ.1,00,000/- வீதம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1,50,000/- வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களும் இத்திட்டத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நற்பெயர் பெற்ற தனியார் பள்ளிகளின் மூலம் உயர் கல்வி வழங்கும் திட்டம்:-

அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, அறிவுக்கூர்மையான கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அந்தந்தப் பகுதியில் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் தரமான கல்வி வழங்கும் வகையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தனியார் பள்ளிகளின் மூலம் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்க தமிழக அரசு ஆணை எண்.14 தொ.வே,(1) துறை நாள் :31.01.2017 வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டணம் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயக்கப்படும் கட்டணத்தையும், விடுதிக் கட்டணம் ரூ.15,000/- மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.


Post a Comment

0 Comments