வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவி : திருநெல்வேலி மாவட்டம்

 

             


                         திருநெல்வேலி மாவட்டம்

வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ,ப., அவர்கள் தகவல்

 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள்/முன்னுரிமை ஏதும் கோர இயலாது.

 

வட்டாரத்தின் பெயர் : மற்றும் காலி பணியிடம்:

·         அம்பாசமுத்திரம் : 01

·         சேரன்மகாதேவி : 03

·         களக்காடு : 02

·         மானூர் : 04

·         பாளையங்கோட்டை : 03

·         பாப்பாக்குடி : 02

·         இராதாபுரம் : 01

·         வள்ளியூர் : 04

 பணியிடமானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

 வட்டார ஒருங்கிணைப்பாளர் ஒப்பந்த ஊதியம் ரூ.12,000/-

 

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:-

1. ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி மற்றும் விஷி ளியீயீவீநீமீ-ல் குறைந்தது   3 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் அல்லது Computer Science அல்லது Computer Application -ல் பட்ட படிப்பு பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

2. 01.01.2023-ல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரார் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். (Residence in same block)

விண்ணப்பிக்கும் முறை :

1. விண்ணப்பம் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

2. தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் (திருநங்கைகள் உட்பட)

3. விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணி அனுபவ சான்று, கல்விச்சான்று, ஆகியவைகளின் நகல் கண்டிப்பாக பதிவேற்றப்பட வேண்டும்

4. விண்ணப்படிவத்தில் உள்ள விபரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

5. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

6. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

இணையவழி விண்ணப்பக் காலம் 22.02.2023 காலை 11.00 மணி முதல் 07.03.2023 மாலை 5.00 மணி வரை மட்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ,ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


Post a Comment

0 Comments