ஓபிசி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ak infi in tamil

ஓபிசி சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

 

 பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும். அதை எப்படி அப்ளை செய்து பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

 

ஓபிசி சான்றிதழ் பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

- ஓபிசி சான்றிதழ் பெற விரும்புகிறவர்கள் SC /ST போன்ற பிரிவின் கீழ் இருக்கக் கூடாது.

- BC, MBC, DNC பிரிவின் கீழ் வருபவர்கள் OBC சான்றிதழை அப்ளை செய்து பெற முடியும்.

எப்படி அப்ளை செய்வது?

தேவையான ஆவணங்கள்:

- ஆதார் அட்டை

- வருமானச் சான்றிதழ்

- பே ஸ்லிப்

- புகைப்படம்

- சொத்து விவரங்கள்

- வங்கிப் புத்தகம்

- ரேஷன் அட்டை

- வகுப்புச் சான்றிதழ்

- பான் எண்

- சுய உறுதிப் படிவம்

 

எப்படி ஆன்லைனில் அப்ளை செய்வது ?

ஸ்டெப் 1

* முதலில் https://www.tnesevai.tn.gov.in/citizen/portallogin.aspx என்ற இணையதளத்தினை ஓபன் செய்து கொள்ளவும். அதன் முகப்புப் பகுதியில் பயனாளர் உள்நுழைவு/Citizen login என்ற தேர்வை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.

உள்நுழைந்ததும் Login செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கெனவே Register செய்திருந்தால் உங்களுடைய User Name, Password உள்ளீடு செய்து Login செய்யவும். புதிதாக Register செய்ய வேண்டுமென்றால் New User என்பதை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய சுயவிவரங்களையும், User Name மற்றும் Password ஆகியவற்றையும் உள்ளீடு செய்யவும். அதன்பின் Login பகுதிக்கு வந்து, நீங்கள் Register செய்யும்போது கொடுத்த User Name, Password ஆகியவற்றைக் கொடுத்தோ, உங்களுடைய மொபைல் எண்ணைக் கொடுத்தோ Login செய்யவும்.

 


* உங்களுக்கான போர்டல் ஒன்று திறக்கும். அதில் Revenue Department என்ற பகுதியில், REV 115 - Other Backward Class என்பதை க்ளிக் செய்யவும்.

 


* உங்களுக்கான வழிமுறைகள் குறித்த பக்கம் ஒன்று திறக்கும். அதைச் சரியாகப் படித்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்துக்கொண்டு Proceed என்பதை க்ளிக் செய்யவும்.

* அடுத்ததாக உங்களுடைய CAN (The Common Account Number)Register செய்ய வேண்டும். உங்களுடைய CAN நம்பர் தெரிந்தால் Register செய்யவும். இல்லை என்றால், அந்தப் பகுதியின் கீழே உங்களுடைய ஆதார் குறித்தான விவரங்கள் கேட்கப்படும்; அதைச் சரியாகக் கவனித்து உள்ளீடு கொடுத்துவிட்டு Search என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய CAN நம்பர் உங்களுக்குக் கிடைத்துவிடும்.


 

 

 

 

 

 

 

அதை க்ளிக் செய்து, கீழேயே உங்களுடைய ஆதார் கார்டில் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை டைப் செய்யவும். பின் அந்த மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளீடு செய்துவிட்டு Proceed என்ற தேர்வை க்ளிக் செய்யவும்.

·         * அடுத்த பக்கத்தில், உங்களுடைய சுய விவரங்கள் அனைத்தும் இருக்கும். தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற விண்ணப்பதாரர் விவரங்கள் படிவத்தில் முன்பே நிரப்பப்பட்டிருக்கும். இந்த விவரங்கள் திருத்த முடியாதவை.

 

 

அதன் கீழே உங்களுடைய தொழில், வகுப்பு, படிப்பு, தந்தை, தாயின் சுயவிவரங்கள், வேலை தொடர்பான விவரங்களை இணைக்க வேண்டும்.

 


 

 

·         சாதி விவரங்கள் மற்றும் தொழில் உள்ளிட்ட விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

·         விண்ணப்பதாரரின் தந்தை / கணவருக்கு தேவையான விவரங்களை உள்ளிடவும்.


 

* அடுத்து, கேட்கப்படும் ஆவணங்களை ஒவ்வொன்றாக அப்லோடு செய்ய வேண்டும். Self declaration form-ஐ அப்படியே Download செய்து, பிரின்ட் எடுத்து, உங்களுடைய கையொப்பம் இட்டு, மறுபடியம் Soft copy ஆக upload செய்யவும்.

அப்லோடு செய்வதற்கு ஏற்ற சைஸ்களில் ஆவணங்களை வைத்திருந்தால் எளிதாகப் பதிவேற்றம் செய்யலாம்.


 

 

- அனைத்தையும் upload செய்தபின், make payment என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே சென்று Terms and Conditions என்ற தேர்வை க்ளிக் செய்த பின் Make payment என்பதை க்ளிக் செய்யவும். உங்களுக்கு எந்த முறையில் பணம் செலுத்த முடியுமோ அதை க்ளிக் செய்து ரூபாய் 60-ஐ செலுத்தவும். பின் உங்களுக்கு ஒரு Acknowledgement slip கொடுக்கப்படும்.

 


இவ்வாறு எல்லாம் பூர்த்தி செய்து, அப்லோடு செய்த பின் உங்கள் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உங்கள் அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

·         தேவையான கட்டணம் செலுத்துங்கள். ஒப்புதல் ரசீது காண்பிக்கப்படும்.

·         ரசீதைப் பதிவிறக்க / அச்சிட அச்சு ரசீதில் கிளிக் செய்க.

·         சமர்ப்பித்த பிறகு (சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்க), பயன்பாடு வரைவாக சேமிக்கப்படும்.

·         நீங்கள் சேமித்த விண்ணப்பப் பிரிவின் கீழ் வரைவு விண்ணப்பங்களைக் கண்டறிந்து ஆவணங்களை பதிவேற்றலாம் அல்லது தேவைக்கேற்ப பணம் செலுத்தலாம்.

·         சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் பிரிவின் கீழ் காணலாம்

 

 பின்னர், இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று சரிபார்க்கப்பட்டு 10 நாள்களுக்குள்ளாக உங்களுக்கு ஒபிசி சான்றிதழ் கிடைக்கப்பெறும்.

இந்த முறையைப் பயன்படுத்தி உங்களுடைய வகுப்புச் சான்றிதழை நீங்கள் அப்ளை செய்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் அருகில் உள்ள இசேவை மையங்களுக்கு சென்றால் அவர்கள் உதவுவார்கள். அவர்கள் கொடுத்த Acknowledgement slip10 நாள்கள் கழித்து எடுத்துச் சென்று, உங்கள் OBC சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

 




 

Post a Comment

0 Comments