RTE - (Right to Education) தனியார் பள்ளியில் LKG to 8th வரை இலவச கல்வி...!

RTE - (Right to Education) Creation by Ak info in tamil

1. RTE - என்பது என்ன...?

தனியார் மெட்ரி அண்ட் CBSC பள்ளிகளில் Lkg முதல் 8 வகுப்பு வரை 25% இலவசமாக பயிலும் சட்டத்திற்குப் பெயர்தான் RTE.

2. 25% என்பது என்ன...?

25% என்பது Fees உள்ளடங்கிய சலுகைகள் அல்ல. ஒரு வகுப்பில் 25% மாணவர்களை இலவசமாக பயிலும் சதவிகிதம் ஆகும்.

உதாரணமாக: ஒரு வகுப்பில் சராசரியாக LKG- ல் 100 மாணவர்கள் அட்மிஷன் ஆகப்படுகிறது என்றால் அதில் 25 மாணவர்கள் RTE- ல் இலவசமாக பயில முடியும்.

3. இட ஒதுக்கீடுகள் என்னென்ன...?

பொதுவாகவே அனைத்து community சாந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

4. குடும்ப ஆண்டு வருமானம் என்ன..?

குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. LKG - வகுப்பில் மட்டும் தான் அட்மிஷனில் சேர்க்க முடியுமா..?

RTE - யில் LKG மற்றும் 1 வது வகுப்பிலும் அட்மிஷன் செய்ய முடியும். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் LKG - யில் மட்டும் தான் அட்மிஷன் பண்ண இயலும்.

ஒரு பள்ளியில் தொடக்க வகுப்பில் இருந்து தான் RTE யில் விண்ணப்பிக்க முடியும். பல பள்ளிகளில் எல்கேஜி தான் முதல் ஆரம்ப வகுப்பாக உள்ளது. ஒரு சில பள்ளிகள் மட்டும் தான் ஒன்றாம் வகுப்பு ஆரம்ப வகுப்பாக உள்ளது. அதனால்தான் எல்கேஜி மட்டும்தான் ஆர் டி யில் அட்மிஷன் முதன்மை தளமாக அமைகிறது.

6. இந்த ஆண்டின் வயதுவரம்பு தகுதி என்ன...?

LKG - 01/08/2019 to 31/07/2020

1STD - 01/08/2017 to 31/07/2018


7. 2023 அட்மிஷன் எப்பொழுது நடைபெறும்.?

ஏப்ரல், மே, அல்லது ஜூன் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது .


8 . தேவைப்படும் ஆவணங்கள் :

1. புகைப்படம்

2. சாதி சான்றிதழ்

3. வருமானச் சான்றிதழ்

4. ஸ்மார்ட் கார்டு

5. ஆதார் கார்டு

6. பெற்றோர் உடைய புகைப்படம் ஆவணம்.


Official Page link : https://rte.tnschools.gov.in/





Post a Comment

0 Comments