தனியார் பள்ளியில் LKG to 8th வரை இலவச கல்வி விண்ணப்பிப்பது எப்படி?

தனியார் பள்ளியில் LKG to 8th வரை இலவச கல்வி விண்ணப்பிப்பது எப்படி?

RTE Scholarship Details in Tamil:- பொதுவாக பெற்றோர்கள் அனைவருக் குமே தன் குழந்தைகள் நல்ல கல்வி அறிவை பெற வேண்டும். சிறந்த கல்வி நிறுவனத்தில் தன் குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசைகள் அதிகம் இருக்கும். இருப்பினும் பொருளாதாரம் மற்றும் வசதி குறைபாடு உள்ள ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகளினால் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி உரிமை சட்டம் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கலாம். சரி இந்த பதிவில் RTE என்றால் என்ன?, யாரெல்லாம் இதற்கு தகுதியுடையவர்கள்?, RTE சேர்க்கை 2022-23 ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? போன்ற விவரங்களை படித்தறியலாம் வாங்க.

>RTE என்றால் என்ன? பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25% இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே RTE சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு இந்த சட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைத்துள்ளது.

தேவைப்படும் ஆவணங்கள்:

குழந்தை போட்டோ, ஆதார், குடும்ப அட்டை, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ்.

Post a Comment

0 Comments