மாற்றுத்திறனாளிகள் அரசு சலுகைகளை பெறுவது எப்படி?

 

மாற்றுத்திறனாளிகள் அரசு  சலுகைகளை பெறுவது எப்படி?

அடையாள அட்டை பெறுவது எப்படி?

மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், மாற்றுத்திறனாளி என்பதை அரசு அங்கீகரிக்க வேண்டும். அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பயன்பெற முடியும். மேலும் இத்தகைய அடையாள அட்டைப் பதிவுதான் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களைத் தீட்டவும், சலுகைகள் அளிக்கவும் அடிப்படையாக அமைகிறது.

சான்றிதழ் எங்கெல்லாம்‌ உதவும்?

·         பள்ளியில் சேர.

·         தேர்வில் கூடுதல் நேரம் பெற.

·         10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் மொழித் தாளிலிருந்து விலக்குப் பெற

·         பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டில் கட்டணச் சலுகை பெற.

·         அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற.

·         இன்னும் பல இடங்களில் சலுகை, முன்னுரிமை பெற.

அரசுத் திட்டங்கள் எவையெவை?*

·         மாத உதவித் தொகை

·         இலவச நான்கு சக்கர வாகனங்கள்

·         காதுகேள் பொறி

·         நிதியுதவி

·         கண்பார்வையற்றோருக்கான உதவி உபகரணங்கள்.

ஒருவரது குறைபாட்டின் தன்மை மற்றும் அதனால் ஏற்பட்ட இயலாமை குறித்து அரசு மருத்துவர் உறுதிசெய்த பிறகே சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். அந்த அடையாள அட்டையில் அவரது இயலாமை சதவிகிதம் குறிக்கப்பட்டிருக்கும். `ரைட்ஸ் ஆஃப் பேர்ஸன்ஸ் வித்  டிஸ்ஸெபிலிட்டீஸ் ஆக்ட் 2016' (Rights of Persons with Disabilities Act, 2016), நடைமுறைக்கு வருவதற்கு‌முன்‌ ஏழு‌ வகைக் குறைபாடுகளே அரசால் அங்கீகரிக்கப்பட்டன.

 தற்போது ஆட்டிசம் உட்பட 21 வகைக் குறைபாடுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

·         🔅 பார்வை இழப்பு

·         🔅பார்வைக் குறைபாடு

·         🔅குணமடைந்த தொழுநோய்

·         🔅செவித்திறனற்றோர், செவித்திறன் குறைபாடு.

·         🔅 கை கால் பாதிப்பு/ விபத்தால் இழப்பு

·         🔅உடல்வளர்ச்சி குன்றிய நிலை

·         🔅மூளை வளர்ச்சிக் குறைபாடு.

·         🔅மனநோய் (Mental illness)

·         🔅 ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder)

·         🔅 பெருமூளை வாதம்

·         🔅  தசை அழிவு

·         🔅 நீண்டநாள் நரம்பு மண்டலப் பாதிப்பு

·         🔅 குறிப்பிட்ட கற்றல் குறைபாடு

·         🔅 பேச்சு மற்றும் மொழித் திறம் குறைபாடு

·         🔅 ரத்த அழிவுச்சோகை (தலசீமியா)

·         🔅ரத்தம் உறையாமை (ஹீமோஃபீலியா)

·         🔅ஸிக்கிள்‌ செல் அனீமியா (Sickle cell anemia)

·         🔅 செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடு உட்பட  இரண்டு அல்லது மூன்று குறைபாடுகள் சேர்ந்துள்ள நிலை

·         🔅அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள்.

·         🔅 நடுக்குவாதம் (பார்க்கின்சன்)          

மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கென அடையாள அட்டை மற்றும் சான்றிதழைப் பெறுவது பல்வேறுவகையில் நன்மை தரும். மேற்கூறிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், *சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையைப்பெற அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளை அணுகி தேவையான விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

 🌹மேலும் எல்லா மாவட்டத்திலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்புகொண்டு சான்றிதழ் மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். இந்த சேவை சென்னை கே.கே நகரில் உள்ள மாநில வள ஆதாரப் பயிற்சி மையத்தில் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை பெற சென்னை கே.கே நகரில் உள்ள எங்களது மாநில வள ஆதாரப் பயிற்சி மையத்தில் விண்ணப்பிக்கலாம்

அவர்களது குறைபாடுகளுக்கேற்ப அதற்கெனக் குறிப்பிட்ட நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை, செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முழுமையாகப் பார்வைத்திறன் இழந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் கை மற்றும் கால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தில் கைகளை இழந்தவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குள்ள மனிதர்கள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோய் குணமடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

🌸 மனவளர்ச்சி குன்றியவர்கள், `ஆட்டிசம்' பாதிப்பு உள்ளவர்கள், புற உலகச் சிந்தனையில்லாதவர்கள், குறிப்பிட்ட கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நாள்களில், அந்தந்தக் குறைபாடுகளை உறுதிசெய்ய அரசு மருத்துவர்கள், இந்த மையத்துக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவரது குறைபாட்டின் தன்மை மற்றும் சதவிகிதம் அரசு மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்டு உறுதி செய்யப்படும். அதன்பிறகு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

 

அடையாள அட்டை பெற தேவைப்படும் ஆவணங்கள் :

 

🔅குடும்ப அட்டை அசல் மற்றும் நகல்

🔅சமீபத்தில் எடுக்கப்பட்ட மார்பளவுப் புகைப்படம்,

🔅 மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும்

🔅 சிகிச்சை சான்றிதழ்கள் போன்றவையாகும்...

 

மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்

Website: http://www.swavlambancard.gov.in

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் (PDF 70 KB)  


Post a Comment

0 Comments